Home இலங்கை அரசியல் அநுர அரசாங்கத்தின் வாகன இறக்குமதி! கடுமையாக சாடும் எம்.பி

அநுர அரசாங்கத்தின் வாகன இறக்குமதி! கடுமையாக சாடும் எம்.பி

0

தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்தின் வாகன இறக்குமதியால் நாட்டிற்கு எந்தவித பயனும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன்(Velusami Radhakrishnan) குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

புதிய அரசாங்கத்தின் வாக்குறுதி

தேர்தலுக்கு முன்னர் வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் அரசாங்கம் நிறைவேற்றாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

அரசாங்கத்தின் முதிர்ச்சியின்மையே சவால்களை முகங்கொடுக்க முடியாமல் உள்ளமைக்கு காரணம் என்பதுடன் அரசாங்கத்தை நடத்துவதற்கு புதுமுகங்கள் மாத்திரம் போதாது.

அத்துடன் வாகன இறக்குமதி முறைமையை அரசாங்கம் மாற்ற வேண்டும்.” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version