இளைஞர் சங்கங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் லால்காந்த தெரிவித்தார்.
இளைஞர்கள் தான் இன்று அரசியலில் ஈடுபட வேண்டும் எங்களைப் போன்ற வயதானவர்கள் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
ஊடவிகயலாளர் ஒருவர் இளைஞர் சங்கங்கள் அரசியல் மயப்படுத்தப்படுவதாக கேட்ட கேள்விக்கு பதலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
முற்றுப்புள்ளி..
அரசியல் பரப்பில் இன்று பெரும் பேசுபொருளாக மாறியுள்ள இளைஞர் சங்கங்கள் அரசியல் மயமாக்கப்படுதல் என்ற கருத்துக்கு அமைச்சர் முற்றுப்புள்ளி வைத்தாற் போல் அமைந்திருந்தது அவரின் பதில்.
அவர் மேலும் கூறியதாவது, இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள். நாம் எதிர்கால தலைவர்களை உருவாக்க வேண்டும்.
அதற்காக இளைஞர் சங்கங்களில் அங்கம் வகிக்கும் உறுப்பினரூடாக எமது அரசியலை நாம் முன்னெடுப்போம் என தெரிவித்தார்.
