Home முக்கியச் செய்திகள் நல்லூர் ஆலய மணல் அகழ்வு விவகாரம் – பிரதேச சபையில் கடும் வாக்குவாதம்

நல்லூர் ஆலய மணல் அகழ்வு விவகாரம் – பிரதேச சபையில் கடும் வாக்குவாதம்

0

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை 9:00 மணியளவில்
தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலமையில் ஆரம்பமானது.

இதில் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு பரப்புவதற்கு மணல் ஏற்றுவதற்கு வீதியை
பயன்படுத்த தவிசாளரால் தன்னிச்சையாக அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக
சபையில் வாதப்பிரதிவாதங்கள் நீண்டநேரம் இடம்பெற்றது.

மீள பாவிக்க கோருவது

கடும் வாதப்பிரதிவாதங்களைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட மணல் மண்ணை மீள பாவிக்க கோருவது என தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், இனிவரும் காலங்களில் வடமராட்சி
கிழக்கிலிருந்து மணல் மண் வழங்குவதில்லை என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இன்றைய அமர்வில் பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் உறுப்பினர்கள் அனைவரும்
கலந்து கொண்டிருந்தனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் – மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version