Home இலங்கை அரசியல் சந்தர்ப்ப அரசியலை வெளிச்சமிட்ட பொது தேர்தல் அறிவிப்பு: லவக்குமார் சாடல்

சந்தர்ப்ப அரசியலை வெளிச்சமிட்ட பொது தேர்தல் அறிவிப்பு: லவக்குமார் சாடல்

0

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொது தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் எவ்வாறான சந்தர்ப்ப அரசியலை நோக்காக கொண்டுள்ளது என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக வடக்கு -கிழக்கு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கு.வி. லவக்குமார் சுட்டிக்காட்டியள்ளார்.

களுவாஞ்சிகுடியில் நேற்று(06.10.2024)  நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

பாரம்பரிய கட்சி 

“கடந்த காலங்களில் அரசியலில் பயணித்தவர்கள் யார் எங்கு ஊழல்
செய்திருக்கின்றார்கள், எங்கு தவறு செய்திருக்கின்றார்கள், யார் மக்களை ஏமாற்றி
இருக்கின்றார்கள் என்பதை மக்கள் மிகவும் துல்லியமாக அறிந்திருக்கின்றார்கள்.

பாரம்பரியமாக இருக்கின்ற கட்சி அவர்களுக்குரிய வேட்பாளர் பட்டியலை
தயாரிப்பதற்கு கூட முடியாமல் இருக்கின்றது.

அவர்களுக்குள்ளே இருக்கின்ற
கொள்கைகளிலும் பதவிகளிலும் பல பிரச்சனைகள் இருக்கின்றன.

தமிழ் தேசிய தலைமை

இவ்வாறானவர்கள் தேசியம்
சார்ந்து மக்களுக்கான சேவை செய்ய முடியாத அளவிற்கு முடங்கி போயுள்ளனர். ஏதோ ஒரு சக்தி அவர்களை வழிநடத்துகின்றது. ஏதோ ஒரு சக்தி தமிழ் தேசியத்தின்பால்
நடக்கின்ற மக்களை உடைப்பதற்காக செயற்படுகின்றது.

தமிழ் தேசிய தலைவரால் ஒரு
குடையின் கீழ் கொண்டுவரப்பட்ட கட்சிகளும் தற்போது கொள்கை ரீதியாக
உடைந்திருக்கின்றார்கள்” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version