Home அமெரிக்கா பிரபலங்களுக்கு மறைமுகமாக பணம் கொடுத்த கமலா ஹரிஸ்

பிரபலங்களுக்கு மறைமுகமாக பணம் கொடுத்த கமலா ஹரிஸ்

0

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட கமலா ஹரிஸ், பிரபலங்களுக்கு மறைமுகமாக பணம் கொடுத்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கமலா ஹரிஸின் பிரசார நிதி அறிக்கை தற்போது அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அறிக்கைகளில், கமலா ஹரிஸை ஆதரித்த பிரபலங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அவர் பணம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கூடைப்பந்தாட்ட நட்சத்திரமான லெப்ரான் ஜேம்ஸின் நிறுவனத்திற்கு ஜனவரி 28, 2025 அன்று ஹரிஸ் பிரசாரக்குழுவால் 50,000 டொலர் செலுத்தப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு மறுப்பு

அத்துடன், அமெரிக்க பாடகர் Cardi Bஇன் நிறுவனத்திற்கு ‘பிரசார நிகழ்ச்சி தயாரிப்பு’ எனும் பெயரில் 58,867 டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது.

எனினும், Cardi B இதற்கு முன்னர் கமலா ஹரிஸின் பிரசாரத்திற்காக பணம் எதனையும் பெறவில்லை என கூறியிருந்தார்.

குறித்த பட்டியலில் இருந்த ஏனைய பிரபலங்கள்:

  • பேயொன்ஸ்(Beyoncé): $165,000 (4 நிமிட உரைக்கு)
  • லேடி காகா(Lady Gaga): $132,753
  • கிரேஸி அப்ரம்ஸ்(Gracie Abrams): $132,335
  • காலிட்(Khalid): $98,000
  • ஓப்ராஹ் வின்பிரே(Oprah Winfrey): $500,000
  • ஏஐ ஷார்ப்டன் (Al Sharpton) அமைப்பிற்கு: $100,000

இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டுக்களை கமலா ஹரிஸ் தரப்பு மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version