Home உலகம் கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல் : வெடித்த சர்ச்சை

கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல் : வெடித்த சர்ச்சை

0

கனடாவில் (Canada)  உள்ள கிருஷ்ணர் கோயில் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவின் கிரேட்டர் டொரான்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் எனும் கோவில் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கோவில் மீது தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருவதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆண்கள் தாக்குதல்

அப்பகுதியில் இருந்த சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில், இரு ஆண்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக, அருகிலிருந்த மதுக்கூடத்துக்கு சென்றுள்ளனர்.

இதையடுத்து, கோயிலின் நுழைவாயிலில் சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.

எதிரான வெறுப்பு 

இருப்பினும், அவர்கள் முகத்தை மறைக்கும் வகையிலான ஹூடி (Hoodie) அணிந்திருந்ததால், அவர்களின் முகம் தெளிவாகத் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்பு குற்றத்துடன் செயல்படும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால், கனடாவில் ஹிந்து வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கனடா காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ஹிந்து கனேடிய அறக்கட்டளை, ஹிந்து வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல், பல்வேறு சமூகங்களின் நல்லிணக்கத்தின் மீது அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version