காந்தாரா சாப்டர் 1
இந்த ஆண்டு இந்திய சினிமாவிலேயே மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ள படம் காந்தாரா சாப்டர் 1. இப்படத்தை கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார்.
2022ல் வெளிவந்த காந்தாரா படத்திற்கு எந்த அளவிற்கு உலகளவில் வரவேற்பு கிடைத்ததோ, அதைவிட இரண்டு மடங்கு அதிகமான வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்துள்ளது. இது கன்னட திரையுலகிற்கு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கியுள்ளது.
வசூல் நாயகனாக மாறிய பிரதீப்.. Dude படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்..
கேஜிஎப் படத்திற்கு பின் கன்னட சினிமா மீது மிகப்பெரிய பார்வை உலகளவில் வந்ததோ, அதை இன்னும் பெரிதாக்கியுள்ளது காந்தாரா சாப்டர் 1. இப்படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து ருக்மிணி வசந்த், குல்ஷன், ஜெயராம் ஆகியோர் நடித்திருந்தனர். இவர்கள் மட்டுமின்றி மற்றும் பலருக்கும் இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வசூல்
இந்நிலையில், இந்த அளவில் வசூல் சாதனை படைத்திருக்கும் காந்தாரா சாப்டர் 1 இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 24 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் காந்தாரா சாப்டர் 1 உலகளவில் ரூ. 830+ கோடி வசூல் செய்துள்ளது.
இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என கூறப்படுகிறது. இப்படத்தின் இறுதி வசூல் அனைவரும் கண்டிப்பாக வியப்பில் ஆழ்த்தும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
