Home இலங்கை சமூகம் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக முடக்கம்

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக முடக்கம்

0

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பாதையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அவ்வப்போது அது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பான பராமரிப்பு பணிகள் இந்த மாதம் முழுவதும் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அறிவுறுத்தல்

இதன்காரணமாக கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பாதை மாத்திரம் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் படி, குறித்த வீதியை பயன்படுத்தும் மக்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தப்படுகிறது.

Source: https://ibctamil.com/article/katunayake-expressway-closed-temporarily-1728338950

NO COMMENTS

Exit mobile version