Home இலங்கை பொருளாதாரம் சடுதியாக அதிகரித்துள்ள அரிசியின் விலை

சடுதியாக அதிகரித்துள்ள அரிசியின் விலை

0

இலங்கையில் கீரி சம்பா அரிசியின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தையில் ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசியின் விலை 350 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் கீரி சம்பாவின் மொத்த விற்பனை விலை 300 முதல் 325 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அந்த விலைக்கு விற்பனை செய்ய முடியாது என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய முடியாத வர்த்தகர்கள் பழக்கமான வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பற்றுச்சீட்டு எதுவுமின்றி இவ்வாறு கீரி சம்பா அரிசி விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசி விற்பனையின் மூலம் 25 முதல் 30 ரூபா வருமானம் கிடைக்கப் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version