நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகி அதன் பிறகு தமிழ், தெலுங்கில் நடித்து முன்னணி ஹீரோயினாக வளர்ந்தார்.
மகாநடி படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. தற்போது பேபி ஜான் படத்தின் மூலமாக கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் நுழைந்து இருக்கிறார். அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பு கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது.
சன் டிவி எதிர்நீச்சல் 2 டீஸர் வெளியானது! புது ஜனனி யார் பாருங்க.. எதிர்பார்க்காத ஒருவர்
2 முறை திருமணம்
கீர்த்தி சுரேஷ் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே ஆண்டனி என்பவரை காதலித்து வருகிறார். 15 வருட காதலுக்கு பிறகு அவர்கள் திருமணம் வரும் டிசம்பர் 12ம் தேதி கோவாவில் நடைபெற இருக்கிறது.
12ம் தேதி காலையில் ஹிந்து முறைப்படி திருமணம் நடக்க இருக்கிறது. அதனை தொடர்ந்து மாலையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடக்க இருக்கிறது.
இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இரண்டு குடும்ப முறைப்படியும் திருமணம் நடக்க போகிறதாம்.