Home இலங்கை சமூகம் மாடியில் இருந்து விழுந்து பலியான பல்கலைக்கழக மாணவன்

மாடியில் இருந்து விழுந்து பலியான பல்கலைக்கழக மாணவன்

0

களனி பல்கலைக்கழகத்தின் (Kelaniya University) மாணவன் பல்கலைக்கழக  விடுதியின் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (23) காலை களனி பல்கலைக்கழக சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா (C.W.W. Kannangara) மாணவர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மாணவன் விடுதியின் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணை

இந்நிலையில், கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

களனி பழகலைக்கழகத்தில் நான்காம் வருடத்தில் கல்வி கற்கும் பண்டார என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடரபான மேலதிக விசாரணைகளை களனி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/kelaniya-university-student-falls-death-hostel-1729655592

NO COMMENTS

Exit mobile version