Home இலங்கை சமூகம் அதிவேகப் பாதைகளின் பயண முறை குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

அதிவேகப் பாதைகளின் பயண முறை குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

0

கடந்த அரசாங்க காலத்தில் அதிவேகப் பாதைகளில் மேற்கொள்ளப்பட்ட மோசடியான பயண முறையொன்றை இடைநிறுத்த தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த அரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில் அ்த்தியாவசியத் தேவைகளின் பேரால் அரசாங்கத்துக்கு நெருக்கமான நபர்களுக்கு அதிவேகப் பாதையில் இலவசமாகப் பயணிக்க எஸ் பாஸ் என்றொரு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருந்தது.

வருமானம் இழப்பு

இவ்வாறான அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்தி கடந்த காலத்தில் நாளொன்றுக்கு 150 தொடக்கம் 200 வரையான வாகனங்கள் அதிவேகப் பாதைகளில் பயணம் செய்துள்ளன. 

அதன் மூலம் வருடமொன்றுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் அதிவேகப்பாதைகளில் இழக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் குறித்த எஸ் பாஸ் விசேட அனுமதிப் பத்திரத்தை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version