Home உலகம் நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல் : வெளியான காணொளி

நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல் : வெளியான காணொளி

0

கொழும்பிலிருந்து (Colombo) மும்பைக்குச் (Mumbai) சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பல் கேரள கடற்கரையிலிருந்து சுமார் 70 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12.5 மீற்றர் இழுவை கொண்ட 270 மீற்றர் நீளமுள்ள இந்தக் கப்பல் ஜூன் 7 ஆம் திகதி கொழும்பிலிருந்து புறப்பட்டு மும்பைக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து 

மேலும் இந்த தீ விபத்தினால், பாதிக்கப்பட்ட 18 பணியாளர்களை இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரால் இன்று (09.06.2025) மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில கொள்கலன்களில் எரியக்கூடிய திரவங்கள் மற்றும் திடப்பொருட்கள் மற்றும் நச்சுப் பொருட்கள் உள்ளிட்ட ஆபத்தான பொருட்கள் இருந்ததாக பேப்பூர் துறைமுக அதிகாரி கேப்டன் கே. அருண் குமார் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட குழுவினர் பேப்பூருக்கு கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது எனவும், பாதிக்கப்பட்ட இந்த குழுவினரில் இந்தியர்கள் யாரும் இல்லை எனவும் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.

https://www.youtube.com/embed/XsVeVqYWPDE

NO COMMENTS

Exit mobile version