பொப்பிசை பாடகர் வேடனுக்கு நிபந்தனைகளுடன் கேரள (Kerala) நீதிமன்றம் முன்பிணை வழங்கியுள்ளது.
தனது பொப்பிசை இசைப் பாடல் மூலம் இந்திய அளவில் பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருப்பவர் கேரளாவைச் சேர்ந்த இசைக்கலைஞர் வேடன்.
வேடன் என்ற ஹிரன்தாஸ் முரளி மீது திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் மருத்துவர் ஒருவரை பலமுறை அத்துமீறல் செய்ததாக கேரள காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
வழக்கு இன்று விசாரணை
30 வயதான வேடன், 2021 முதல் 2023 வரை பலமுறை அவரை அத்துமீறல் செய்ததாக இளம் மருத்துவர் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்தநிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, காதலில் தோல்வியடைந்தவர்கள் எப்போதும் மற்றொருவரின் எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள் என கேரள நீதிமன்றம் தெரிவித்துள்ளது.