Home முக்கியச் செய்திகள் இந்தியாவை உலுக்கிய தீ விபத்து: டசின் கணக்கானோர் பலி!

இந்தியாவை உலுக்கிய தீ விபத்து: டசின் கணக்கானோர் பலி!

0

இந்தியாவின் (India) கிழக்குப் பகுதியில் உள்ள கொல்கத்தா நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய கொல்கத்தாவில் உள்ள ரிதுராஜ் ஹோட்டலில் நேற்று (30) மாலை இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆறு தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மக்களின் நிலை

ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள், ஹோட்டல் கட்டிடத்தின் ஜன்னல்கள் மற்றும் குறுகிய விளிம்புகள் வழியாக மக்கள் தப்பிக்க முயற்சிப்பதைக் காட்டுகின்றன.

அத்துடன், மாடி ஒன்றில் பாய்ந்து தீயில் இருந்து தப்பிக்க முயன்ற ஒருவரும் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோடி இரங்கல்

இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்த சம்பவம் தொடர்பாக மன வேதனை அடைந்ததாக தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டில், புது தில்லியில் நான்கு மாடி வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சுமார் 27 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version