Home சினிமா சின்ன வயசுல நிறைய தப்புகள் பண்ணியிருக்கிறேன்.. பாடகர் கிரிஷ் ஓபன் டாக்

சின்ன வயசுல நிறைய தப்புகள் பண்ணியிருக்கிறேன்.. பாடகர் கிரிஷ் ஓபன் டாக்

0

பாடகர் கிரிஷ்

தமிழ் திரையுலகில் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவர் கிரிஷ். தமிழில் வெளிவந்த காதல் படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். இதன்பின், வேட்டையாடு விளையாடு, உன்னாலே உன்னாலே, நண்பன், வாரணம் ஆயிரம், துப்பாக்கி என பல படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், சிங்கம் 3 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ரசிகர்களின் மனம் கவர்ந்த பின்னணி பாடகராக இருக்கும் கிரிஷ், சமீபத்தில் பேட்டி ஒன்றில் மிகவும் வெளிப்படையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க

கிரிஷ் ஓபன் டாக்

இதில் “சின்ன வயசுல நான் பெரிய செலிப்ரிட்டி என்று நிறைய தப்புகள் பண்ணியிருக்கிறேன். அமெரிக்காவுக்கு ஒரு ஆறு மாசம் போயிட்டு வந்தவங்களே மாறிவிடுறாங்க. நான் அங்கேயே படித்து வேலைக்கு போனதால் கொஞ்சம் பண்ணக்கூடாத விஷயங்களை பண்ணிட்டேன். என்னுடைய நடவடிக்கைகளில் ஒரு திமிரு ஆணவம் இருக்கும்.

யாருடைய சிபாரிசும் இல்லாம நானாக கஷ்டப்பட்டு வந்த ஒரு வாழ்க்கை இது என்று நினைத்தேன். ஆனா, சினிமா எனக்கு மரியாதை, ஒழுக்கம் கற்று கொடுத்தது. நம்ம பக்குவமா இருந்தாதான் மக்கள் நம்மளை மதிப்பார்கள். நம்ம காலரைத் தூக்கி விட்டுகிட்டு போனா கொஞ்ச நாள் வேணா பார்ப்பதற்கு துரு துருனு நல்லா இருக்கும், காலப்போக்கில் வெறுத்துருவாங்க. கண்டிப்பா பணிவு என்பது இருக்கணும்”

NO COMMENTS

Exit mobile version