Home முக்கியச் செய்திகள் யாழ். வடமராட்சி கடலில் கரையொதுங்கிய சிலை! காண குவியும் மக்கள்

யாழ். வடமராட்சி கடலில் கரையொதுங்கிய சிலை! காண குவியும் மக்கள்

0

யாழ்ப்பாணம்(Jaffna) – வடமராட்சி கிழக்கு, வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை ஆகிய இரு தெய்வங்களும் இணைந்த சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

அண்மைக்காலமாக காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்களினால் கடல் சீற்றங்கள்,
சூறாவளி, புயல்கள், தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது.

கரையொதுங்கிய சிலை

அந்த வகையில் இந்தோனேசியா, மலேசியா அல்லது இந்தியா, போன்ற ஏதாவது ஒரு நாட்டில் இருந்து இந்த சிலை வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சிலையை பார்வையிடுவதற்காக அதிகளவான மக்கள் அந்த பகுதியில் குவிந்துள்ளனர். 

மேலதிக தகவல் – கஜிந்தன்

NO COMMENTS

Exit mobile version