Home முக்கியச் செய்திகள் திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! குகதாசனால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட கண்டனம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! குகதாசனால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட கண்டனம்

0

மதம் என்பது அபின் போன்றது என்ற கார்ல் மார்க்ஸின் கருத்து உண்மை என்பதை எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலரின் செயற்பாட்டை வைத்து அறிந்துக் கொள்ள முடிவதாக தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

இன்று (21.11.2025) நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சில மனிதர்கள் புறச்சூழலால் மாறியிருப்பார்கள் எனத் தோன்றினாலும் அகச் சூழலால் மாறியிருக்க மாட்டார்கள் என்ற கருத்தையும் தற்போது தான் உண்மை என ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி மீது குற்றச்சாட்டு

இன மற்றும் மதவாதம் அற்றவர்கள் போல காணப்பட்டாலும் கூட அகச் சூழலால் மாறுபடாதவர்களாக இன மற்றும் மதவாதத்தை தூக்கிக் கொண்டு சுமப்பவர்களாக உள்ளனர் எனவும் குகதாசன் எம்.பி குற்றம் சுமத்தியுள்ளார்.

இனவாதிகளின் கூச்சலுக்கு ஆளாகாமல் அமைதி காத்து வரும் திருகோணமலை சிங்கள, தமிழ் மக்களுக்கு நன்றி செலுத்த விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் திருகோணமலையில் அரங்கேறிய புத்தர் சிலை விவகாரம் நாட்டில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான பின்னணியில், இவ்விடயம் தொடர்பில் திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பானவர் என்ற வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் முதற்தடவையாக இன்று (21.11.2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/h6P3ddh0MdA

NO COMMENTS

Exit mobile version