லொஸ் ஏஞ்சல்ஸில் ட்ரம்ப் சட்டவிரோதமாக கடற்படையினரையும் தேசிய காவல்படையையும் நிறுத்துவதைத் தடுக்க அவசரகால மனுவை தாக்கல் செய்துள்ளதாக கலிபோர்னியாவின் ஆளுநர் கெவின் நியூசம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் கெவின் நியூசம், தனது எக்ஸ் தள பதிவில் விடுத்துள்ள அறிவிப்பில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
அவசர கால மனு
குறித்த பதிவில், ”லொஸ் ஏஞ்சல்ஸில் ட்ரம்ப் சட்டவிரோதமாக கடற்படையினரையும் தேசிய காவல்படையையும் நிறுத்துவதைத் தடுக்க நான் அவசரகால மனுவை தாக்கல் செய்துள்ளேன்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இராணுவத்தை அந்நாட்டு குடிமக்களுக்கு எதிராகத் திருப்பும் வகையில் செயற்படுகின்றார்.
NEW: I just filed an emergency motion to block Trump’s illegal deployment of Marines and National Guard in Los Angeles.
Trump is turning the U.S. military against American citizens.
The courts must immediately block these illegal actions. pic.twitter.com/ms4JELUk3v
— Gavin Newsom (@GavinNewsom) June 10, 2025
இவ்வாறான இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை நீதிமன்றங்கள் உடனடியாகத் தடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
