Home உலகம் பிரான்சில் பயங்கரம் : புத்தக பையை சோதனை செய்தவரை குத்திக் கொன்ற மாணவர்

பிரான்சில் பயங்கரம் : புத்தக பையை சோதனை செய்தவரை குத்திக் கொன்ற மாணவர்

0

 பிரான்சின்(france) நொஜென்ட் மார்னேபகுதியில் இன்று காலை இடைநிலை பாடசாலையொன்றின் மேற்பார்வையாளர் ஒருவர் அதே பாடசாலை மாணவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்து தாக்குதலை நடத்திய மாணவர் உடனடியாக காவல்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

 பை சோதனைகளில் உதவிய ஒரு காவல்துறை அதிகாரி, பள்ளி ஊழியருக்கு எதிராக மாணவர் பயன்படுத்திய அதே கத்தியைப் பயன்படுத்தி மாணவர் கைது செய்யப்பட்டபோது லேசான காயமடைந்தார்.

பாடசாலைகளில் அர்த்தமற்ற வன்முறை அலை 

கொல்லப்பட்டவர் 31 வயதான கண்காணிப்பாளர் என்பதை மரணத்தை உறுதிப்படுத்திய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பாடசாலைகளில் அர்த்தமற்ற வன்முறை அலை எழுந்துள்ளதாக கண்டனம் செய்துள்ளார்.

 மாணவர்களின் பாடப்புத்தக பைகளில் கத்தி உட்பட்ட ஆயுதங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வவகையில் நடத்தப்பட்ட சோதனையின் போது குறித்த கண்காணிப்பாளர் குத்தப்பட்டுள்ளார். இந்த சம்பத்தை அடுத்து பிரான்சில் கல்வி அமைச்சர் எலிசபெத் போர்ன் நொஜென்ட் பகுதிக்கு விரைந்துள்ளார்.

கொடிய தாக்குதல்கள் அரிதானவை

இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:

 பிரான்சில் இதுபோன்ற கொடிய தாக்குதல்கள் அரிதானவை, ஆனால் பள்ளி வன்முறை குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன.

 அதைக் குறைக்க கல்வி அமைச்சகம் இந்த ஆண்டு சில பள்ளிகளில் பை சோதனைகளை அறிமுகப்படுத்தியது. இவ்வாறு பள்ளிப் பை சோதனையின் போது 186 கத்திகள் கைப்பற்றப்பட்டன, மேலும் 32 பேர் கைது செய்யப்பட்டனர். பிராங்கோயிஸ் டோல்டோ பள்ளியில் நடந்த தாக்குதல் விசாரிக்கப்பட்டு வருகிறது.

 

NO COMMENTS

Exit mobile version