தொழிலாளர் தினமாக இருந்த மே தினம் அரசியல்வாதிகளின் கொண்டாட்ட தினமாக மாறியுள்ளது என மலையக மக்கள் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன்
தெரிவித்துள்ளார்.
கொட்டகலை சாமஸ்ட்டன் மேபீல்ட் தோட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச
அரசியல் கூட்டங்கள்
மேலும் தெரிவிக்கையில், “தொழிலாளர்களை இன்று அரசியல் கூட்டங்களுக்கு மே தினத்தினை முன்னிட்டு அழைத்து செல்கிறார்கள்.குண்டூசி கூட கொண்டு போகாத தொழிலாளர்களை குண்டு இருக்கிறதா என சோதித்து அதனை தொடந்து தண்ணீர் கூட வழங்காமல் கூட்டம் முடியும் வரை அடைக்கப்படும் நிலையே காணப்படுகின்றன.
இந்நிலை மாற வேண்டும் என்றால் தொழிலாளர்கள் உண்மையாக மே தினத்தினை கொண்டாடக்கூடிய சுதந்திரமும் மகிழ்ச்சியும் இருக்க வேண்டும்.
மே தினம் என்பது தொழிலாளர்கள் தினம் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய
விடுமுறை வழங்கப்பட்டு அவர்கள் மகிழ்ச்சிகரமாக கொண்டுவதே உண்மையான தொழிலாளர்
தினம். ஆனால் இன்று அது அரசியல்வாதிகளின் கைகளில் சென்று அரசியல்வாதிகளின்
கொண்டாட்ட தினமாக மாறியுள்ளது
இந்நிலையில் இந்த தோட்டத்தில் உள்ள மக்கள்
மிகவும் மகிழ்ச்சிகரமாக இந்த மே தினத்தினை கொண்டாடுவது உண்மையான மேதினமாகவும்
இது மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் உரியது” எனவும் மலையக தொழிலாளர் மக்கள் முன்னணியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியை சேர்ந்த முக்கியஸ்த்தர்கள், தொழிலாளர்
தேசிய சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
உயிர்த்த ஞாயிறு விவகாரத்தில் தீர்வை தராதவர்களுக்கு வாக்களிக்கவேண்டாம்: கர்தினாலின் கோரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |