Home சினிமா பாரில் ஏற்பட்ட தகராறு.. ஐடி ஊழியரை கடத்தி அடித்த வழக்கில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு

பாரில் ஏற்பட்ட தகராறு.. ஐடி ஊழியரை கடத்தி அடித்த வழக்கில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு

0

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன், பாண்டியநாடு என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த இவர், கடந்த சில ஆண்டுகளாக பெரிதும் பட வாய்ப்புகள் இல்லம் இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக சப்தம் திரைப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் முத்து மீது சொன்ன பொய்யை நம்பி சண்டை போடும் சீதா… சிறகடிக்க ஆசை புரொமோ

தலைமறைவு

கடந்த ஞாயிற்று கிழமை கேரளாவில் கொச்சியில் உள்ள பாரில் லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்களுக்கும் மற்றொரு புறம் உள்ள குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதத்தை தொடர்ந்து ஐடி ஊழியரை கடத்தி அடித்ததாக தகவல் கூறப்படுகிறது. இதன்பின் ஐடி ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மிதுன் மற்றும் அனீஷ் ஆகியோர் கைது செய்தனர்.

இந்த விசாரணையில் மீதுன், அனீஸ் மற்றும் மற்றொரு பெண் நண்பர் நடிகை லட்சுமி மேனனுடன் காரில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு ஆகியுள்ளார் என போலிஸ் தகவல் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version