பொத்துவில், அருகம்விரிகுடா போன்ற பகுதிகளில் இலங்கையர்களுக்குச் சொந்தமான நிலங்கள் இஸ்ரேலியர்களால் அபகரிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
இஸ்ரேலியர்கள் இந்தப் பகுதிகளில் உணவகங்களைத் திறந்திருந்தாலும், வெளிநாட்டினர் மட்டுமே அந்த இடங்களைப் பார்வையிட முடியும் என்று கூறப்படுகிறது.
சுற்றுலா விசா
இதற்கமைய சுற்றுலா விசா காலாவதியாகி தங்கிய பல இஸ்ரேலியர்கள் இலங்கையில் தங்கியிருக்கின்றனர்.
இது தொடர்பாக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறான பின்னணியில் அரசாங்கம் தற்போது விசாக்களை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தப் பகுதிகளை இஸ்ரேலிய காலனியாக மாற்ற அரசாங்கம் அனுமதிக்கின்றதா? என மரிக்கார் கேள்வி எழுப்பினார்.
