மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் இல்மனைட் கனிய மணல் அகழ்விற்கு எதிராக
மக்கள் எழுச்சி ‘கருநிலம்’ போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக
திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்றையதினம்(06.08.2025) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை பிரதான கடற்கரை முன்றலில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பை தனியார் அமைப்பொன்று ஏற்பாடு செய்திருந்தது.
வாசகங்கள்
இதன்போது, நிலமிழந்தால் எங்கள் பலமிழப்போம், நீங்கள் அகழ்வது மணல் மட்டுமல்ல
எங்களது வாழ்க்கை உள்ளிட்ட பல வாசகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
