Home இலங்கை குற்றம் லொகு பட்டியின் கணக்குகளில் சிக்கிய பில்லியன் தொகை பணம்: தீவிரமடையும் விசாரணை

லொகு பட்டியின் கணக்குகளில் சிக்கிய பில்லியன் தொகை பணம்: தீவிரமடையும் விசாரணை

0

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான லட்டுவஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா எனப்படும் “லொகு பெட்டி” என்பவருக்கு சொந்தமான சுமார் 1 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்ய குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைகளை தொடங்கியுள்ளது.

லொகு பட்டியின் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்ட பணத்தை ஒரு சந்தேகநபர் உண்டியல் அமைப்பு மூலம் நாட்டிற்கு வெளியே அனுப்பியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

லொகு பட்டியின் போதைப்பொருள் கடத்தலின் நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பான நபர், சமீபத்தில் கந்தான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

330 மில்லியன் ரூபாய் புழக்கத்தில்

மேலும் சந்தேகநபரின் கணக்கில் 330 மில்லியன் ரூபாய் புழக்கத்தில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் 1 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள பரிவர்த்தனைகளை மேற்கொண்ட இரண்டு கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அந்த கணக்குகளிலிருந்து பரிவர்த்தனைகளை மேற்கொண்ட நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் ‘லோகு பட்டி’ தற்போது பூசா சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version