Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டம் குறித்து சபாநாயகரின் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டம் குறித்து சபாநாயகரின் அறிவிப்பு

0

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான சட்டம் குறித்த சட்ட விதந்துரைகள் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றின் விதந்துரைகள் அல்லது சட்ட விளக்கம் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன(Jagath Wickramaratne) தெரிவித்துள்ளார்.

சட்ட விளக்கம் கிடைக்கப்பெறவில்லை 

நாடாளுமன்றில் இன்றைய தினம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

எதிர்க்கட்சியினர் உள்ளூராட்சி மன்ற சட்டம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்தார். 

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் விசேட சட்டம் தொடர்பிலே இவ்வாறு தமக்கு சட்ட விளக்கம் கிடைக்கப்பெறவில்லை எனவும் சபாநாயகர் சட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version