நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலையானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது.
அந்த வகையில் டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ள நிலமையானது கிரான் பிரதேச விவசாயிகளையும் விட்டுவைக்கவில்லை.
தமது வாழ்வாதாரத்தை ஈடுசெய்யவே பாடுபடும் குறித்த பிரதேச மக்களுக்கு இந்த பேரிடர் பெரும் பேரிடியாக மாறியுள்ளது.
அத்தோடு கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளின் பாராமுகமும் ஒருவகையில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த நிலைக்கு காரணமாகியுள்ளமையை பிரதேச மக்கள் வெளிப்படுத்திய கருத்துக்களின் மூலம் அறியக்கிடைத்தது.
இந்நிலையில் குறித்த பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும், கடந்தகால அரசியல் பாராமுகத்தின் விளைவுகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி…
https://www.youtube.com/embed/NYQxOZHYUaE
