இலங்கையின் சீனி தொழிலை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக
தொழில்துறை பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியை பொருளாதார நிலைத்தன்மை மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்துடன்
இணைக்கப்பட்ட ஒரு தேசிய முன்னுரிமை என்று அவர் விபரித்தார்.
இந்தநிலையில் 1980 களில், குறித்த தொழில்துறையின் வலுவான செயல்திறனை அவர்
நினைவு கூர்ந்துள்ளார்.
கரும்பு உற்பத்தி
மேலும் கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் போன்ற நிறுவனங்களின் தொடர்ச்சியான
முயற்சிகள் இருந்தபோதிலும், அதன் சரிவுக்கு “திறமையின்மை, புறக்கணிப்பு
மற்றும் ஊழல்” என்பனவே காரணம் என்று கூறியுள்ளார்.
மேலும் மொனராகலை போன்ற பகுதிகளில் 100,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்
கரும்பு உற்பத்தியை நம்பியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
