Home இலங்கை அரசியல் போலி ஆவணங்களுடன் சிக்கிய உள்ளூராட்சி வேட்பாளரின் கணவர்!

போலி ஆவணங்களுடன் சிக்கிய உள்ளூராட்சி வேட்பாளரின் கணவர்!

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் கணவர் பாணந்துறை
வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி ஆவணங்களைத் தயாரித்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.

போலி ஆவணம்

பாணந்துறை வடக்கு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட
சுற்றிவளைப்பில் சந்தேகநபர் பாணந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்
வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 66 வயதுடைய பண்டாரகம பிரதேச சபையின் ஓய்வுபெற்ற
ஊழியர் ஒருவர் ஆவார்.

சந்தேகநபரின் மனைவி எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி
சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் என்று பொலிஸ் விசாரணையில்
தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

சந்தேகநபர் போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்
என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள், கிராம
சேவைச் சான்றிதழ்கள், போலி முத்திரைகள் தயாரித்தல் போன்ற குற்றச்சாட்டுக்களில்
ஈடுபட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் சந்தேகநபரிடமிருந்து பல போலி ஆவணங்கள் பொலிஸாரால்
கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version