Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி சபைத் தேர்தல் : தனித்து களமிறங்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுன

உள்ளூராட்சி சபைத் தேர்தல் : தனித்து களமிறங்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுன

0

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனித்துப் போட்டியிடுவதில் அவதானம் செலுத்தி வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், அதன் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை சமசமாஜக் கட்சியுடன் உடன்படிக்கையை ஏற்படுத்துவதில் மாத்திரம் அவதானம் செலுத்தியுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை மற்றும் நிறைவேற்று குழு அண்மையில் கூடி, இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளது.

உள்ளூராட்சி சபை

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டியிடுவதே பொருத்தமானது என அக்கட்சியில் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், பொதுத் தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பிலும் அண்மையில் நடைபெற்ற நிறைவேற்று குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்போது இரண்டு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் மீண்டும் அவர்களை தொடர்பு கொள்வது பொருத்தமானது என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், மற்றொரு குழு இதற்கு நேர்மாறான கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

NO COMMENTS

Exit mobile version