வவுனியாவில் மதியத்திற்கு பின்னர் வாக்களிப்பு மந்த நிலையை அடைந்துள்ளது.
வவுனியாவில் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல
செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள
பிரதேச சபை என்பவற்றுக்கான தேர்தல் நடைபெற்று வருகின்றது.
இன்று காலை 9 மணிவரை 31 வீதமாக காணப்பட்ட வாக்களிப்பு வீதம் மதியம் 2 மணி வரை 49.2 வீதமாக காணப்படுவதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்
தெரிவித்துள்ளார்.
மக்கள் தேர்தலில் பெரியளவில் ஆர்வம் காட்டாமையே இந்த மந்த நிலைக்கு காரணம்
எனப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செய்தி – திலீபன்
முதலாம் இணைப்பு
வவுனியாவில் மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளன.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று (06.05) காலை ஆரம்பமாகிய
நிலையில் மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களிப்பதையும் அவதானிக்க முடிகிறது.
வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம்
பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை
ஆகிய 5 சபைகளுக்கும் 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1731 பேர்
போட்டியிடுகின்றனர்.
வாக்களிப்பு நடவடிக்கைகள்
ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 293 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 154
வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொலிஸாரின் பாதுகாப்புக்கு
அமைதியில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் நடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் வவுனியா
தெற்கு தமிழ் பிரதேச சபைக்காக கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில்
வாக்கினை பதிவு செய்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வவுனியா
மாநகர சபைக்காக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தமது வாககினை பதிவு
செய்தனர்.
