முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த(lohan ratwatte) நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளார்.
அதன்படி அவர் இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.
உயிருடன் இருக்கும் வரை அனுமதிக்கப் போவதில்லை
தொடர்ந்து நடந்த போராட்டத்தின் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் அமைச்சர் பதவியையும் வகித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அநுர குமார திஸாநாயக்கவை(anura kumara dissanayake) இந்த நாட்டின் ஜனாதிபதியாக்க தாம் உயிருடன் இருக்கும் வரை அனுமதிக்கப் போவதில்லை என பகிரங்கமாகக் கூறினார்.