Home இலங்கை குற்றம் ஹபரண-திருகோணமலை வீதியில் வெடிபொருட்கள் கொண்டு சென்ற லொறி மீட்பு

ஹபரண-திருகோணமலை வீதியில் வெடிபொருட்கள் கொண்டு சென்ற லொறி மீட்பு

0

ஹபரணா-திருகோணமலை பிரதான வீதியில் வெடிபொருட்கள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு லொறியை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஹதரஸ் கொட்டுவ பொலிஸ் நிலையத்துடன் சேர்ந்த அதிகாரிகள் வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது இந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, சாரதியின் இருக்கை கீழ் டாஷ்போர்டின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த சீ-4 (C-4) வகை வெடிபொருட்கள் அடங்கிய பை கண்டுபிடிக்கப்பட்டது.

வெடி மருந்து

சுமார் 156.07 கிராம் எடையுடைய வெடி மருந்து இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சீ-4  C-4 என்பது மிகவுமுயர்தரமான வெடிபொருளாகவும், அதிகாரபூர்வ அனுமதியின்றி இதனை ஏற்றி செல்லுதல்  தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லொறி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

NO COMMENTS

Exit mobile version