Home முக்கியச் செய்திகள் கெஹெலிய மீது மற்றுமொரு புதிய குற்றச்சாட்டு! வெளியான தகவல்

கெஹெலிய மீது மற்றுமொரு புதிய குற்றச்சாட்டு! வெளியான தகவல்

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella), தான் பயன்படுத்துவதாகக் கூறப்பட்ட, மெர்சிடிஸ் பென்ஸ் வாகனத்தின் வாடகைக்காக, பெருந்தொகை பணத்தை அமைச்சிலிருந்து பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாதாந்தம் 240,000 ரூபாவினை அவர் அமைச்சிலிருந்து பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (Ciaboc), இது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

 சுகாதார அமைச்சு

குறித்த வாடகை கெஹெலிய ரம்புக்வெல்லவின் நண்பர்களில் ஒருவரின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், சுகாதார அமைச்சின் பதிவுகளின்படி, அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பென்ஸ் ரக சிற்றூந்து ஒருபோதும் சுகாதார அமைச்சு வளாகத்திற்கு வரவில்லை என்பதும் விசாரணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version