Home இலங்கை சமூகம் யுவதியின் விபரீத முடிவு : அதிர்ச்சியில் தாய்

யுவதியின் விபரீத முடிவு : அதிர்ச்சியில் தாய்

0

புத்தளம், முந்தல் நவதன்குளம் பகுதியில் யுவதி ஒருவர் தொடருந்து தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது காதலனுக்கு வேறு உறவு இருப்பதாக சந்தேகமடைந்த யுவதியொருவர் நேற்று இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

தனியார் ஆடை நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த 20 வயதுடைய பியுமி மல்ஷானி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


யுவதியின் விபரீத முடிவு

காதலர்களுக்கு இடையில் ஏற்பட்ட காரசாரமான தொலைபேசி உரையாடலின் பின்னர் மகள் விபரீத முடிவை எடுத்துள்ளதாக தாயார் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடருந்து வரும் தண்டவாளத்தை நோக்கி மகள் ஓடியதை கண்ட தாயார் அலறியடித்து ஓடிய போதிலும் அவர் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

சாரதி தொடருந்தினை நிறுத்தி யுவதியின் சடலத்தை மதுரங்குளிய ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version