Home முக்கியச் செய்திகள் தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

0

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (MA Sumanthiran) தெரிவித்துள்ளார்.

யாழ். (Jaffna) ஊடக அமையத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த தேர்தல் அநுர அலை என்று கூறப்பட்ட பொய் பரப்புரைக்கு முடிவு கட்டி தமிழ் தேசியத்தின் இருப்பை உறுதி செய்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருவெற்றி பெற்றுள்ளோம்

அவர் மேலும் கூறுகையில், ”தமிழ் தேசியத்தை வடக்கு கிழக்கில் வலிதாக்கி எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி.

மாற்றம் என்ற அலைக்குள் மக்கள் அள்ளுண்டு விடுவர் என பெரும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த சூழலில் நாம் இம்முறை 58 சபைகளில் போட்டியிட்டு 40 சபைகளின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் வகையில் பெருவெற்றி பெற்றுள்ளோம்.

இந்த வெற்றியானது தமிழ் தேசியத்தின்பால் மக்கள் கொண்டுள்ள நேசத்தை காட்டுகின்றது.

தமிழ்க்கட்சிகள் ஆதரவு

இந்நேரம் பல சபைகளில் ஆட்சியமைக்கும் தரப்பாக நாம் இருந்தாலும் அதற்கான பெரும்பான்மை பலத்தை சக தமிழ் கட்சிகள் வழங்கவேண்டிய அல்லது ஆதரவு கோர வேண்டிய தேவையும் இருக்கின்றது.

காலச்சூழலின் நிலலையை உணர்ந்து சக தமிழ் கட்சிகள் ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.

எனவே தமிழ் மக்களின் தேசங்கள் தமிழ் தரப்பினரிடமே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் உறுதியாகவே இருக்கின்றனர்“ என தமிழரசுக் கட்சியின் செயலாளர் M.A சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/vUk8cC6pD1g

NO COMMENTS

Exit mobile version