Home சினிமா மதராஸி படத்தின் முன்பதிவு.. இதுவரை இவ்வளவு கோடி வசூல் வந்துள்ளதா

மதராஸி படத்தின் முன்பதிவு.. இதுவரை இவ்வளவு கோடி வசூல் வந்துள்ளதா

0

மதராஸி

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி ஹீரோ சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் மதராஸி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வல், விக்ராந்த், பிஜு மேனன், ஷபீர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நாளை இப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருகின்றனர்.

முன்பதிவு

மதராஸி படத்தின் முன்பதிவு கடந்த வாரம் துவங்கிய நிலையில், இதுவரை நடைபெற்ற முன்பதிவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மதராஸி படம் முன்பதிவில் இதுவரை ரூ. 3.8 கோடி வசூல் செய்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்று.

Source: https://cineulagam.com/article/madharasi-movie-advance-booking-box-office-1756954040

NO COMMENTS

Exit mobile version