Home முக்கியச் செய்திகள் ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 20 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 20 பேர் பலி!

0

புதிய இணைப்பு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 20 பேர் உயிரிழந்ததுடன் 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதலாம் இணைப்பு 

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் நேற்று (31)நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.47 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூரிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்

 இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.

ஆப்கானிஸ்தானில் கடந்த 16 மற்றும் 13-ம் திகதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. 

ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதும் மக்கள் இதனால் இடம்பெயர்வதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version