Home உலகம் சீனாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0

கிர்கிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் சீன நாட்டின் வடமேற்கில் உள்ள ஜின்ஜியாங்கில் இன்று வியாழக்கிழமை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன பூகம்ப வலையமைப்பு மையம் (CENC) தெரிவித்துள்ளது.

கிர்கிஸ்தான்-ஜின்ஜியாங் எல்லைக்கு அருகிலுள்ள அக்கி மாவட்டத்திற்கு அருகில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:44 மணிக்கு (0744 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் அதன் மையப்பகுதி 10 கிமீ (6.2 மைல்) ஆழத்தில் இருந்தது என்று CENC தெரிவித்துள்ளது.

எந்த தகவலும் கிடைக்கவில்லை 

உள்ளூர் நேரப்படி மாலை 4:34 மணி நிலவரப்படி உயிரிழப்புகள் அல்லது கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக உள்ளூர் அதிகாரிகளுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாவட்டத்தில் போக்குவரத்து, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வழக்கம் போல் இயங்கி வருவதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

NO COMMENTS

Exit mobile version