Home இலங்கை கல்வி சாதாரணதர பரீட்சை : 09 ஆம் தரத்தில் 9ஏ பெறுபேறுகளை பெற்று சாதித்த மாணவன் :...

சாதாரணதர பரீட்சை : 09 ஆம் தரத்தில் 9ஏ பெறுபேறுகளை பெற்று சாதித்த மாணவன் : குவியும் வாழ்த்துக்கள்

0

காலி, மகிந்த கல்லூரியின் மாணவரான பிஹது பினல், சாதாரண தர பரீட்சையில் 9 ஏ பெறுபேற்றைப்பெற்று நாடு முழுவதும் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் அவனின் இந்த சாதனைக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இந்த சாதனையை படைக்க காரணம் 9 ஆம் தரத்திலேயே, அந்த மாணவன் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியதுதான்

 மகிழ்ச்சியில் திளைக்கும் மாணவன்

  இந்த அசாதாரண வெற்றி குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சியடைகிறார். இதற்கு முன் யாரும் செய்யாத ஒன்றை புதிதாகச் செய்ய வேண்டும் என்ற தனது தீவிர விருப்பத்தின் காரணமாக பிஹது இந்த முடிவை எடுத்தார்

தனது இந்த சாதனைக்கு முக்கிய காரணமாக விளங்கிய தனது பெற்றோருக்கு முதற்கண் அவர் தனது நன்றியைத் தெரிவிக்கிறார்.

மாணவன் முன்கூட்டியே சாதாரண தர பரீட்சையை எதிர்கொள்ளப் போகிறான் என்பதை அறிந்த பிறகு, காலி மகிந்த கல்லூரியின் ஆசிரியர்களும், அவனுக்காக ஒரு பெரும் அர்ப்பணிப்பைச் செய்துள்ளனர்.

பாடசாலை ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவை

பள்ளி ஆசிரியர்கள் அவனுக்குத் தேவையான முந்தைய தேர்வுத் தாள்களைக் கொடுத்து உதவியுள்ளனர், மேலும் மற்ற ஆசிரியர்கள் பாடத்திட்டத்தின் முக்கிய பகுதிகளையும் கோட்பாட்டுக் கருத்துக்களையும் மிகத் தெளிவாக விளக்கி அவனை ஊக்குவித்துள்ளனர்.

இந்த வெற்றியை நோக்கி தன்னை வழிநடத்திய அனைத்து ஆசிரியர்களுக்கும் பிஹது தனது மரியாதைக்குரிய நன்றியைத் தெரிவிக்கிறான்.

Source: https://ibctamil.com/article/mahinda-binal-who-took-ol-in-year-9-got-9-a-1782127669

NO COMMENTS

Exit mobile version