Home இலங்கை அரசியல் மகிந்தவின் சொந்த ஊர் மக்களுக்கு நேர்ந்த பெரும் அனரத்தம்: வெளியிடப்பட்ட அறிக்கை

மகிந்தவின் சொந்த ஊர் மக்களுக்கு நேர்ந்த பெரும் அனரத்தம்: வெளியிடப்பட்ட அறிக்கை

0

முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய எல்ல பேருந்து விபத்து குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியுள்ளதாவது,

“நேற்று (04) இரவு எல்ல-வெல்லவாய வீதியில் நடந்த பேருந்து விபத்து குறித்து கேள்விப்பட்டு நான் மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். 

அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள நாடு

தங்காலை நகராட்சி மன்றத்தின் செயலாளர் டி. டபிள்யூ. கே. ரூபசேன மற்றும் பலர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விபத்து எனது சொந்த ஊரான தங்காலையில் உள்ள அனைவருக்கும் மிகுந்த துக்கத்தை அளிக்கிறது என்பதை நான் அறிவேன்.

உள்ளூர்வாசிகள், குறிப்பாக இளஞர்கள், காவல்துறை, இராணுவம் மற்றும் விமானப்படை, தீயணைப்பு படை அதிகாரிகள், மருத்துவ குழுக்கள் மற்றும் மிகவும் ஆபத்தான சூழலில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கயிறுகளின் உதவியுடன் பள்ளத்தில் கீழே இறங்கி உயிர்களைக் காப்பாற்றிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்

பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பொறுப்பாளர் பாலித ராஜபக்ச உள்ளிட்ட வைத்திய ஊழியர்களையும் நான் நினைவு கூர விரும்புகிறேன்.

இந்த துயர விபத்தில் உயிரிழந்த அனைவரும் ஆன்மாக்களும் சாந்தியடைய வாழ்த்துகிறேன். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பாக தங்காலை நகராட்சி மன்ற ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் மற்ற அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

பேருந்து விபத்தில் காயமடைந்த அனைவரும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காயமடைந்த அனைவருக்கும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.” 

NO COMMENTS

Exit mobile version