Home இலங்கை உக்ரைன் போர்களத்தில் மகிந்தவின் முன்னாள் பாதுகாவலர்!

உக்ரைன் போர்களத்தில் மகிந்தவின் முன்னாள் பாதுகாவலர்!

0

இலங்கையில் (Sri Lanka) 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த இறுதி யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மெய்பாதுகாவலராக இருந்த இராணுவ அதிகாரி ஒருவர் தற்போது உக்ரைனுக்கு (Ukrain) ஆதரவாக போரிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலராக இருந்த லஹிரு காவிந்த அத்துருசிங்க என்பவரே உக்ரைனுக்கு ஆதரவாக போரிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன் படையில் வெளிநாட்டினரை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 பேர் கொண்ட குழுவின் தலைவராக அவர் செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறும் முறை தொடர்பில் வெளியான தகவல்

எதிரான போராட்டம்

அத்தோடு, கொழும்பில் (Colombo) மூண்ட கோட்டாபாய அரசிற்கு எதிரான போராட்டத்தின் போது அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலராக அவர் பணியாற்றியுள்ளார்.

கடந்த எட்டு மாதங்களாக எந்தவொரு பாதிப்புகளும் இன்றி போர்களத்தில் செயற்பட்டு வருவதாகவும் தான் ஒருபோதும் கூலிப்படையாக இணையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது முழு விருப்பத்தின் பேரிலேயே உக்ரைன் இராணுவத்தில் இணைந்துகொண்டதாகவும் எவ்வாறாயினும் இலங்கை இராணுவத்தில் இருந்து தான் அதிகாரப்பூர்வமாக விலகவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

அமைச்சர்களுக்கு இடையில் மோதல்: ஆளுங்கட்சி உறுப்பினர் வைத்தியசாலையில்..

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version