ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் மாலபேயில் உள்ள தனது வீட்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கத் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த நபர் நாமல் ராஜபக்சவை தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, மகிந்தவுக்கு கொழும்பில் ஒரு வீட்டை வழங்க தொழிலதிபர்கள் குழுவொன்று தயாராக இருப்பதாக தெரியவருகிறது.
தேவையான வசதிகள்
பத்தரமுல்லை ஜெயந்திபுரவில் ஒரு தொழிலதிபரும் ஒரு வீட்டை வழங்க முன்வந்துள்ள நிலையில், அதனை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு குழு சென்று ஆய்வு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், தேவையான வசதிகள் கிடைத்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு திரும்புவார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமன்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதியின் ஓய்வுக்கான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் ஒரு பகுதி என கூறிய எதிரிமன்ன, அவருக்கு சரியான மதிப்பை வழங்க இந்த அரசாங்கம் தயாராக இல்லை என்றும் கூறியுள்ளார்.
