ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஓய்வு பெற்ற பிறகு, ஒரு நொடி கூட பயன்படுத்தாமல் அனைத்து வசதிகளையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரியப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் முடிவு
அனைத்து வசதிகளையும் விட்டுக்கொடுக்கும் ஜனாதிபதியின் முடிவின் விளைவாகவே, முன்னாள் ஜனாதிபதிகளும் அனைத்தையும் விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்றியதன் மூலம் அனைத்து வசதிகளையும் விட்டுக்கொடுக்கும் தனது முடிவை ஜனாதிபதி அநுர எடுத்துக்காட்டியதாக நாமல் கருணாரத்ன கூறியுள்ளார்.
இதுவே உண்மைக் கதை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
