Home இலங்கை அரசியல் பொதுஜன பெரமுன அதிபர் வேட்பாளர் தொடர்பில் மகிந்த தகவல்

பொதுஜன பெரமுன அதிபர் வேட்பாளர் தொடர்பில் மகிந்த தகவல்

0

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தங்களது கட்சி இதுவரையில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் வேட்பாளர் தொடர்பில் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என மகிந்த தெரிவித்துள்ளார்.

உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள்

இதேவேளை, எதிர்வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பெறுவார் என உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமது ஆதரவு, கட்சியின் கொள்கைக்கு இணங்கி நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய வேட்பாளருக்கே வழங்கப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன (Sri Lanka Podujana Peramuna) தற்போது தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் என பிரபல வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version