முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் போலியானவை என அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த
குறித்த விடயம் தொடர்பில் பதிலளித்த மகிந்த ராஜபக்சவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்த தகவல்கள் தவறானவை என்றும், அவர் தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சமீபத்தில் பல சந்தர்ப்பங்களில் உடல்நிலை சீரற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சமீபத்தில் அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
