Home முக்கியச் செய்திகள் மீண்டும் கொழும்பு திரும்புகிறார் மகிந்த :அனல் பறக்கப்போகும் அரசியல்

மீண்டும் கொழும்பு திரும்புகிறார் மகிந்த :அனல் பறக்கப்போகும் அரசியல்

0

முன்னாள் ஜனாதிபதிகள் முன்பு வசித்து வந்த அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் மீட்க அரசாங்கம் நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்னர், தங்காலையிலுள்ள கார்ல்டன் மாளிகைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்புக்குத் திரும்ப முடிவு செய்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி, அதிஷ்டத்திற்காக அங்கு பால் ஊற்றியதாக அறியப்படுகிறது.

மீண்டும் அரசியல் செயற்பாடு

தங்காலை மாளிகைக்குச் சென்ற பிறகு அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக விலகிய முன்னாள் ஜனாதிபதி, தற்போது கொழும்புக்குத் திரும்புவதன் மூலம் தனது அரசியல் ஈடுபாடுகளை மீண்டும் தொடங்கத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு தனியார் வைத்தியசாலையொன்றில் அண்மையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version