Home இலங்கை அரசியல் விஜேராம வீட்டிலிருந்து விரைவில் துரத்தப்படவுள்ள மகிந்த

விஜேராம வீட்டிலிருந்து விரைவில் துரத்தப்படவுள்ள மகிந்த

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Jayasinghe) விஜேராம மாவத்தையிலுள்ள அரச மாளிகையிலிருந்து வெகுவிரைவில் கட்டாயம் வெளியேற நேரிடும் என அரச தரப்பு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.

கம்பஹா (Gampaha) மாவட்டத்துக்குரிய தேசிய மக்கள் சக்தியின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மகிந்த ராஜபக்ச வெளியேற நேரிடும்

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனும் 20 நாட்கள் வரை தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். கடைசியில் நீதிமன்றத்தில் சரணடைய நேரிட்டது.

மகிந்த ராஜபக்சவுக்கு இந்நாடு மீது மக்கள் மீது அக்கறை இருந்தால் மக்கள் பணத்தை வீண்விரயம் செய்யாமல் வெளியேற வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் அரச மாளிகையில் இருந்து கட்டாயம் செல்ல நேரிடும் என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை

இதேவேளை, கம்பஹாவில் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச சம்பந்தப்பட்ட நில பரிவர்த்தனைகள் குறித்து குற்றப் புலனாய்வு (சிஐடி) விசாரணை கோரியுள்ளதாக தொழிலாளர் துணை அமைச்சர் மகிந்த ஜெயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய ஜெயசிங்க, இது தொடர்பாக பதில் காவல் துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளார்.

இம்புல்கொட பகுதியில் பௌத்த விகாரைகள் மற்றும் துறவிகளுக்குச் சொந்தமான நிலங்களில் தான் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக சமீபத்தில் வெளியான ஊடக அறிக்கைகளுக்கு பதிலளித்த போது அவர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version