Home இலங்கை அரசியல் சிறையில் அடைக்கப்படுவாரா மகிந்தானந்த..! தீர்ப்பிற்கான நாள் குறிப்பு

சிறையில் அடைக்கப்படுவாரா மகிந்தானந்த..! தீர்ப்பிற்கான நாள் குறிப்பு

0

அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த இரண்டரை மில்லியன் ரூபாவைச் செலவிட்டு பொரளை கின்சி வீதியில் சொகுசு வீடு ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் பண மோசடி சட்டத்தின் கீழ் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு (Mahindananda Aluthgamage) எதிரான வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க அறிவிக்கவுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த இரண்டரை கோடி ரூபாவிற்கும் மேல் செலவு செய்து பொரளையில் சொகுசு வீட்டை வாங்கிய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக பண மோசடி சட்டத்தின் கீழ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இதனை தெரிவித்தார்.

கனடாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தொழில்நுட்பம் : சிக்கப்போகும் பலர்

சட்ட விரோதமான பணத்தில் சொகுசு வீடு கொள்வனவு

குற்றவியல் சட்டம் மற்றும் பணமோசடி சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த, 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு இடையில் சட்டவிரோதமாக சம்பாதித்த 27 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு வீடொன்றை பொரளை கின்சி வீதியில் வாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 20, 2013. சட்டமா அதிபர் மகிந்தானந்தவிற்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்தார்.

விண்வெளியில் அணு ஆயுத தடை : ரஷ்யாயாவின் முடிவால் கடும் கோபத்தில் அமெரிக்கா

இது தொடர்பான நீண்ட விசாரணையின் முடிவில், வழக்கின் முடிவை அறிவிக்க திகதி நிர்ணயிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version