Home இலங்கை அரசியல் ஆபத்தான விவகாரமொன்றில் அரசியல்வாதிகளின் வலுவான தொடர்பு! வெளிப்படுத்தும் அநுர

ஆபத்தான விவகாரமொன்றில் அரசியல்வாதிகளின் வலுவான தொடர்பு! வெளிப்படுத்தும் அநுர

0

போதைப்பொருட்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பண்டாரவளை மலையக மக்களுக்கான வீட்டு உரிமைச் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் அபாயம் குறித்து எப்போதும் கேள்விப்படுவதாகக் கூறிய ஜனாதிபதி, இது அரசு இயந்திரத்தால் மட்டும் முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒன்றல்ல என்றும், அதற்கு மக்களின் ஆதரவு தேவை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

கறுப்பு வணிகம்

அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“தற்போதுள்ள காட்சி ஆபத்தானது. இந்தக் கறுப்பு வணிகம் எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. இது காவல்துறை, இராணுவம் மற்றும் சுங்கத்துறை உட்பட பல துறைகளிலும் பரவியுள்ளது.

போதைப்பொருட்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே ஒரு பெரிய தொடர்பு உள்ளது. பாரிய அளவில் பணப்புழக்கம் காணப்படுகிறது.

அதிகாரப்பூர்வ இராணுவ முகாம்களில் உள்ள ஆயுதங்கள் பாதாள உலகத்திற்குள் கடத்தப்படுகின்றன. நாம் தேர்வு செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, இதை நாம் காணாதது போல் தொடர்வது. 

இல்லையெனில், நாம் அதற்கு எதிராக போராட வேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும்? எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எந்த வகையிலும் தலைகீழாக மாறாது. இந்த நாட்டில் இந்த பேரழிவை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்”என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version